search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை வழக்கு"

    டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை நீதிபதி 13ந்தேதிக்கு ஒத்திவைத்தார். #dspvishnupriyasuicidecase

    கோவை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணு பிரியா கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி தனது முகாம் அலுவலகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது.

    இந்த நிலையில் வழக்கை கைவிடுவதாக கூறி கோவை தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில் தற்கொலை செய்து கொண் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. சி.பி.ஐ. முறையாக விசாரணை நடத்தவில்லை என கூறி கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் விஷ்ணு பிரியா தற்கொலை தொடர்பாக அதிகாரிகள் டார்ச்சர் தொடர்பான ஆதாரம் இல்லை. இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றார். விஷ்ணு பிரியா தந்தை சார்பில் ஆஜரான வக்கீல் அருண்மொழி வாதாடும் போது, சி.பி.சி.ஐ.டி. விசாரித்தது போல் தான் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. இதில் உயர் அதிகாரி உள்பட 7 பேருக்கு தொடர்பு உள்ளது. அவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை தன்மை தெரியும் என்றார். 7 பேரையும் அழைத்து விசாரணை நடத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பாக வருகிற 13-ந் தேதி முடிவு செய்யப்படும் என கூறிய நீதிபதி நாகராஜ் விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார். #dspvishnupriyasuicidecase 

    கோவை கோர்ட்டில் நடைபெற்று வந்த டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிஐக்கு கால அவகாசம் வழங்கி விசாரணையை வரும் 15-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #DSPVishnupriya #CBI
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. இவர் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி முகாம் அலுவலகத்தில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

    உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பல கட்ட விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கடந்த ஏப்ரல் 16-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்தது.



    சி.பி.ஐ. அறிக்கைக்கு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி எதிர்ப்பு தெரிவித்தார். மீண்டும் வழக்கை விசாரிக்க வலியுறுத்தினார்.

    இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி நடராஜன் வழக்கை விசாரித்தார். அப்போது சி.பி.ஐ. தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. நீதிபதி கால அவகாசம் வழங்கி விசாரணையை வரும் 15-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    மேலும் இந்த வழக்கில் மேலும் அவகாசம் வழங்க முடியாது என்றும் உத்தரவிட்டார். #DSPVishnupriya #CBI

    பொன்னேரி அருகே குடும்பத்தகராறில் காதல் திருமணம் செய்த கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicidecase

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த கேசவபுரத்தை சேர்ந்தவர் ஜெய் வெங்கடேஷ் (வயது 24). லிப்ட் மெக்கானிக். இவரும் வாணியம்பாடியைச் சேர்ந்த தனலட்சுமியும் (20) கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பு மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

    நள்ளிரவில் ஜெய் வெங்கடே‌ஷன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி தனலட்சுமி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று இறந்தார்.

    இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்பட வில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது ஜெய் வெங்கடேசனும், தனலட்சுமியும் தற்கொலை செய்து கிடப்பது தெரிந்தது.

    இது குறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தனலட்சுமி உடல் முழுவதும் மண்ணெணையாக இருந்தது. முதலில் அவர் மண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. பின்னர் அதனை செய்ய முடியாமல் மாத்திரைகளை தின்று தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.

    ஜெய் வெங்கடேசனுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இதற்காக அவர்கள் வீட்டில் கேக் வாங்கி வைத்திருந்தனர். காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #suicidecase

    டெல்லியில் விமான பணிப்பெண் தனது வீட்டின் மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கணவரின் பெற்றோரை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. #DelhiHC
    புதுடெல்லி:

    டெல்லியில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தவர் அனிசா பத்ரா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அனிசாவை அவரது கணவர் மாயங் சிங்வி கொடுமை படுத்தியதாக அனிசாவின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து, மாயங் சிங்வியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீதிமன்ற காவலில் வைக்குமாறு தீர்ப்பளித்தது.



    இந்நிலையில், அனிசாவின் தற்கொலை தொடர்பாக எங்களுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என மாயங் சிங்வியின் பெற்றோர் சுஷ்மா சிங்வி, ஆர்.எஸ் சிங்வி ஆகியோர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மாயங் சிங்வியின் பெற்றோரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், அவர்கள் ஜாமீன் கோரியது குறித்து டெல்லி போலீசார் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தனர். #DelhiHC
    டெல்லியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட விமான பணிப்பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணையில் அவரது கணவர் மாயங் சிங்விக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. #Delhi
    புதுடெல்லி:

    டெல்லியில் சமீபத்தில் விமான பணிப்பெண் அனிசா பத்ரா வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் அவரது கணவர் மாயங் சிங்வி உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    தனது மகள் அனிசா பத்ராவை அவரது கணவர் கொடுமை படுத்தியதாகவும், பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், அனிசா பத்ராவின் பெற்றோர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். மேலும், அனிசா சிங்வி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது கணவருக்கு தான் தற்கொலை செய்துகொள்வதாக குறுந்தகவல் அனுப்பியிருந்தார்.

    இதையடுத்து, நேற்று மாலை, அனிசா பத்ராவின் கணவர் மாயங் சிங்வி போலீசாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மாய்ங் சிங்வியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    அனிசா பத்ராவின் பெற்றோர்கள் கடந்த ஜூன் மாதம் தனது மகள் அனிசா பத்ராவை கணவர் மாயங் சிங்வி கொடுமை படுத்துவதாகவும், அனிசா பத்ராவுக்கு ஏதேனும் நேர்ந்தால் முழு காரணம் மாயங் சிங்வி தான் எனவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Delhi
    ×